புகாரை திரும்ப பெற ரூ.50,000 கொடுத்தார்கள்… மீண்டும் பரபரப்பை கிளப்பிய நடிகை விஜயலட்சுமி…!!

நடிகை விஜயலட்சுமி சீமான் மீது அளித்திருந்த புகாரை வாபஸ் பெற்றிருந்த நிலையில் , சீமான் இன்று  விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கம் அளித் த நிலையில் ஆஜரானார்.  இந்நிலையில் சீமான் மீது கூறிய புகார்களை நிரூபிப்பேன் என்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் விஜயலட்சுமி.

புகாரை வாபஸ் பெற்றுவிட்டு எனது அக்காவுடன் கிளம்பிப் போகச் சொன்னதுடன், ரூ.50 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தினார்கள். என் மீது மான நஷ்ட வழக்கு போட்டாலும், ஆதாரங்களை எடுத்து வந்து நிரூபிப்பேன். சாட்டை துரைமுருகனிடம் உள்ள செல்போன் உரையாடல் விவரங்களை எடுத்தாலே, சீமான் என்னிடம் பேசியது தெரியும் என்றார்.

Leave a Reply