ஹிந்தி நடிகர் சோனுசூட், ஓடும் ரயிலில் பயணிகள் ஏறி இறங்கும் நுழைவு வாயிலில் உட்கார்ந்தவாறு பயணிக்கும் வீடியோவை வெளியிட்டிருப்பதற்கு வடக்கு ரயில்வே விமரிசித்து உள்ளது. இவ்வீடியோ தொடர்பாக வடக்கு ரயில்வே பகிர்ந்துள்ளதாவது, பிரியமான சோனுசூட் அவர்களே, இந்த நாடு மட்டுமின்றி உலகின் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் நீங்கள் ஒரு முன் மாதிரியாக (ரோல் மாடலாக) இருக்கிறீர்கள்.

ரயில் படிகட்டில் அமர்ந்து பயணிப்பது மிகவும் அபாயகரமானது ஆகும். ஆகவே தயவுகூர்ந்து இதை செய்ய வேண்டாம். மிகவும் நிம்மதியான பாதுகாப்பான பயணத்தை அனுபவியுங்கள் என பதிவிட்டு உள்ளது. அதேபோல் மும்பை ரயில்வே காவல்துறை ஆணையர் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். இது போன்ற செயல்கள் சினிமாவிற்கு தேவைப்படலாம், ஆனால் இயல்பு வாழ்க்கைக்கு தேவையில்லை. எனவே பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் என்று பகிர்ந்துள்ளார்.