பிரமாண்ட படத்திற்கு பின்…. அடுத்தடுத்து வரும் பட வாய்ப்புகள்…. பிஸியாக மாறிய திரிஷா…..!!!!

திரிஷா நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறாத சூழலில், பொன்னியின் செல்வன் 2 பாகங்களும் வெளியாகி மீண்டும் அவரது மார்க்கெட் நிலவரத்தை எகிற வைத்திருக்கிறது. இதையடுத்து திரிஷாவுக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க அழைப்புகள் வருகிறது. இதனிடையே தி ரோடு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டார். இப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கிறது.

அதோடு திரிஷா மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் பிருந்தா எனும் வெப் தொடரிலும் நடிக்கிறார். இது தவிர தமிழில் விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கும் லியோ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில் அஜித்துக்கு ஜோடியாக விடா முயற்சி திரைப்படத்திலும் நடிப்பதற்கு திரிஷாவிடம் பேசி வருகின்றனர். அதுமட்டுமின்றி 2 புதிய படங்களில் நடிக்கவும் திரிஷாவுக்கு  வாய்ப்புகள் வந்துள்ளது. இதனால் நடப்பு ஆண்டு அதிக படங்களில் நடிக்கும் நாயகியாக திரிஷா மாறி உள்ளார்.

Leave a Reply