கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம்  பழைய தியேட்டர் பகுதி அமைந்துள்ளது. இதன் அருகே பிரபலமான ஹோட்டல் ஒன்று அமைந்துள்ள நிலையில் இங்கு தினந்தோறும் ஏராளமானோர் சாப்பிடுவார்கள். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகன் ரோகித்திடம் அந்த கடையில் மாட்டிறைச்சி ஃப்ரை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

அதன்படி ரோகித் சென்று மாட்டிறைச்சி வாங்கி வந்த நிலையில் அதை வீட்டில் வைத்து பிரித்தனர். அப்போது அதில் இறந்த நிலையில் வால் இல்லாமல் பல்லி ஒன்று கிடந்துள்ளது. இதைப் பார்த்து தந்தையும் மகனும் அதிர்ச்சி அடைந்த நிலையில் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ரோஹித் புகார் கொடுத்தார். அதன் பிறகு அந்த உணவு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த உணவகத்தில் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.