சரத்குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மாயி திரைப்படத்தின் இயக்குனர் சூரிய பிரகாஷ் மாரடைப்பால் காலமானார். 1996 ஆம் ஆண்டு ராஜ்கிரன் நடிப்பில் வெளியான மாணிக்கம் திரைப்படத்தை இயக்கிய திரை உலகில் அறிமுகமான இவர், பெண் ஒன்று கண்டேன், திவான், அதிபர் மற்றும் வருஷ நாடு உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.