பிரதமர் மோடி இன்று சென்னை வருவதை முன்னிட்டு மாநகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 15000 போலீசாருடன் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்  போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு தங்கும் விடுதிகளில் சோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாரின் ட்ரோன்கள் நகர் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன