முன்பின் தெரியாத பெண்ணை டார்லிங் என்று அழைப்பது கூட பாலியல் வன்கொடுமை தான் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் குடிபோதை ஆசாமி ஒருவர் பெண் போலீசை டார்லிங் என்று அழைத்துள்ளார். அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் இப்படி அழைப்பது இந்திய தண்டனை சட்டத்தின்படி குற்றம் எனவும் எச்சரித்துள்ளது. எனவே இனி டார்லிங் என்று முன்பின் தெரியாத பெண்களை யாரும் அழைக்க வேண்டாம்.