
பாம்பன் பாலத்தின் வழியே ரயில்கள் போவதற்கு மறுஅறிவிப்பு வரும் வரை தடை நீடிக்கப்பட்டு உள்ளது.
சென்ற டிச 23-ஆம் தேதி பாம்பன் பாலத்தில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தபோது, அப்பாலத்திலிருந்து எச்சரிக்கை ஒலி எழுந்தது. அதன்பின் கடந்த 24ம் தேதி முதல் இந்த பாலத்தின் வழியாக ரயில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடந்தது. இதற்காக ஜனவரி 10 ஆம் தேதி இன்று வரை பாம்பன் பாலத்தில் ரயில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
பாம்பன் பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் பற்றிய அறிக்கை, லக்னெள ரயில்வே ஆராய்ச்சி, வடிவமைப்பு தர நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மறு அறிவிப்பு வரும் வரையிலும் பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்வதற்கான தடை நீட்டிப்பதாக மதுரை கோட்ட ரயில்வே அறிவித்து உள்ளது.