வடக்கு டெல்லி நரேலா பகுதியில் பாஜக பெண் நிர்வாகி வர்ஷா பவார்(28) என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக அவர் காணாமல் போன நிலையில் பள்ளியின் அறையில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. அறை வெளியில் பூட்டப்பட்டிருந்ததால் அவர் இறந்த தகவல் தாமதமாக தான் தெரியவந்தது. இவருடைய கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரான சோகன்லால் என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.