பாஜக கட்சியிலிருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அதோடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து காயத்ரி ரகுராம் கூறிவரும் நிலையில், நேற்று ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பாஜக பெண்களை அவமானப்படுத்தி பாதுகாப்பு கொடுக்காததற்காக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ஜனவரி 27-ஆம் தேதி முதல் நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். தனியாக இருந்தாலும் அல்லது யார் வேண்டுமானாலும் இந்த நடைபயணத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

நான் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் இதை செய்வேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கானது. இந்த நடைபயணம் அரசியலில் உள்ள பொது பெண்களுக்கும், சாதாரண பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் எந்த தடைகள் வந்தாலும் ஜனவரி 17-ம் தேதி முதல் பாஜகவை கண்டித்து காயத்ரி ரகுராம் நடைபயணம் மேற்கொள்வேன் என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.