நான் பாஜகவில் இணைய உள்ளதாக சொல்லும் செய்தி துளியும் உண்மை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளி பாஜகவில் இணைய உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் இணைய உள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து விளக்கம் அளித்த அவர், இந்த தகவல் முற்றிலும் தவறானது என மறுத்துள்ளார். மேலும் இதில் துளியும் உண்மை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.