பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி…. ஜனவரி 26 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு கல்வித்துறைகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றது. அதன்படி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் டெல்லியில் ரோபோடிக் லீக் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்கள் மத்தியில் ரோபோடிக்ஸ் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது டெல்லியில் உள்ள ஐஐடி பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் குறித்த பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படும் எனவும் இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சி வகுப்பில் ரோபோடிக்ஸ் அடிப்படையில் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்வில் ரோபோடிக்ஸ் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply