மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலமாக பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது, மதிய உணவில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சாதம், பருப்பு, காய்கறிகள் சோயாபீன்ஸ் மற்றும் முட்டை போன்றவற்றுடன் கூடுதலாக கோழிக்கறி மற்றும் பருவ கால  பழங்களை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மத்திய அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்கான கோழிக்கறி மற்றும் பருவ கால பழங்கள் வாரத்திற்கு ஒருமுறை என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநில அரசு கூடுதலாக 371 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாகவும் 4 மாதத்திற்கு பின் திட்டம் தொடர்வது பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பஞ்சாயத்து தேர்தல் மற்றும் 2024 -ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்த அறிவிப்பை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்  காங்கிரஸ் கட்சி அரசியல் களமாடி வருவதாக பா.ஜ.க வினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.