தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அதில் பல்வேறு அறிவுரைகளை அமைச்சர்களுக்கு வழங்க உள்ளார். மழை நீர் வடிகால் கட்டுமான பணி, வடிகால்களில் அடைப்புகளை அகற்றும் பணி மற்றும் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.