பொதுவாக ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தாயிடம் இருந்து கிடைக்கும் விட்டமின் ஏ சத்து அதற்கு அடுத்த ஆறு மாதங்களில்  குறைய தொடங்கும். ஒரு கட்டத்தில் அந்த சத்து மிகவும் குறைந்தால் குழந்தைக்கு வளர்ச்சி குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மக்கள் நலவாழ்வுத்துறை சார்பாக குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மருந்து வழங்கப்படுகிறது.

அதன்படி இன்று முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆறு மாதம் முதல் ஐந்து வயதுடைய குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மருந்து கொடுக்கப்படுகிறது. புதன்கிழமை மட்டும் முகாம் நடைபெறாது. மற்ற நாட்களில் 11 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு மில்லி லிட்டர் மருந்தும் ஒரு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இரண்டு மில்லி லிட்டர் மருந்தும் கொடுக்கப்படுகிறது.