தமிழகத்தில் மின்சார துறையை சீரமைக்கும் விதமாக அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஸ்மார்ட் மீட்டர் வந்த பிறகு மின் கணக்கீடு குறித்த விபரங்கள் மின் பயனர்களின் தொலைபேசிக்கு நேரடியாக எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்படும். அது மட்டுமல்லாமல் மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறையும் அமலுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இந்த நிலையில் மின் பயனர்கள் தங்களுடைய மின் கட்டணத்தை செலுத்த தவறிவிட்டால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் இது குறித்து மின் கூட்டிய பயனர்களுக்கு தெரிவிக்கும் விதமாக அலர்ட் கொடுக்கும் வகையில் அதில் புதிய நடைமுறையை மின்வாரியம் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எஸ்எம்எஸ் அல்லது இமெயில் மூலமாக பயணர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனவும் இதனை அறிந்து முன்கூட்டியே மின்கட்டணத்தை செலுத்தி அடுத்த ஆறு மணி நேரத்தில் பயனர்கள் மின் இணைப்பை பெறலாம் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.