வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில், 7 தளங்களைக் கொண்ட வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 33 பேர் உடல்கருகி உயிரிழந்த நிலையில் 11 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.