இந்தியாவில் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு விதிகளுக்கு புறம்பாக தமிழகத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அரசின் இந்த விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னி பேருந்துகளின் விவரங்களை http://www.tnsta.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் இந்த பேருந்துகளில் பயணிகள் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தால் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது