கடந்த 2016 ஆம் வருடம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. அந்த நாட்களில் மக்கள் ATM களில் வரிசையில் நின்றது உள்ளிட்ட பல சம்பவங்களை நம்மால் மறக்க முடியாது. இவ்வாறு அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இதற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட இருக்கிறது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை விடுக்கப்பட்டதால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நீதிபதி எஸ்.ஏ. நசீா் தலைமையிலான அமர்வு பணமதிப்பிழப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க இருக்கிறது. ஆகவே மத்திய அரசின் பணமதிப்பிழப்பு செல்லுமா? செல்லாதா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது