2023-24 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நேற்று (பிப்.1) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகாவின் பாரம்பரியமிக்க இல்கல் கைத்தறி சேலையை உடுத்தி இருந்தார். புகழ்பெற்ற இல்கல் சேலைகள் கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள இல்கல் நகரில் கைத்தறி நெசவாளர்களால் தயாரிக்கப்படுகிறது.
அம்மாநிலத்தில் இல்கல் புடவை மிகவும் பிரபலமானவை ஆகும். அதேபோன்று நிதியமைச்சரின் இல்கல் புடவையில் புகழ்பெற்ற பாரம்பரிய தார்வாட் எம்பிராய்டரி செய்யப்பட்டு இருந்தது. கர்நாடக எம்.பி-யும், மத்திய அமைச்சருமான பிரலாத் ஜோஷி இந்த புடவையின் பாரம்பரியம் மற்றும் சிறப்புகளை எடுத்துரைத்து, இதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பரிசளித்தார்.