சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், நகைக் கடை ஒன்றில் நபர் ஒருவர் சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரத்தை லாவகமாக விழுங்கும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், நபர் ஒருவர் வாடிக்கையாளரைப் போல நகைக் கடைக்குள் நுழைந்து மோதிரங்களை பார்வையிடுகிறார். ஊழியர்கள் பல மாடல்களைக் காட்டி விளக்கும் வேளையில், யாருக்கும் தெரியாமல் ஒரு வைர மோதிரத்தை மிக சாதுரியமாக எடுத்துத் தனது வாய்க்குள் போட்டு விழுங்குகிறார். அதன் பிறகு, தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதது போல ஊழியர்களிடம் தொடர்ந்து சகஜமாகப் பேசி, மேலும் சில மாடல்களைக் காட்டுமாறு கேட்கும் அந்த நபர், திருடும் நோக்கத்திலேயே இதையெல்லாம் செய்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த அதிர்ச்சியூட்டும் முழுச் சம்பவமும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், ‘Elegance Jewellers’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு, எல்பிஜி கேஸ் விலையேற்றத்தைக் கிண்டல் செய்தும், சிசிடிவி கேமரா மட்டும் இல்லையென்றால் இந்தத் திருட்டு உலகிற்குத் தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Elegance Jewellers | London (@elegance.jewellers)