மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி பகுதியில் கூலித்தொழிலாயான ராம் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயாருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு  அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராம் பிரசாத்தின் தாயார் உயிர் இழக்க தன்னுடைய தாயின் சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளார். ஆனால் வழக்கமாக கேட்கும் தொகையை விட ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 3000 ரூபாய் அதிகமாக கேட்டுள்ளனர்.

இந்த தொகையை ராம் பிரசாத்தால் கொடுக்க முடியாததால் தன்னுடைய தந்தையின் உதவியுடன் ராம்பிரசாத் தாயின் சடத்தை வீட்டிற்கு 5 கிலோமீட்டர் தூரம் வரை தோளில் சுமந்து நடந்தே கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.