
கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் சஞ்சீவ்-சுந்தரி தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக உடல் நலப் பிரிவால் பாதிக்கப்பட்ட சஞ்சீவ் நேற்று தினம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சீவ் உயிரிழந்தார். இதனால் அவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து வந்து இறுதி சடங்கு செய்தனர்.
இந்த நிலையில் கணவர் உடலை பார்த்து அழுத சுந்தரி திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது சுந்தரி மாரடைப்பால் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். அதன் பிறகு கணவன் மனைவி இருவரது உடலையும் உறவினர்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.