நீங்கள் இருவரும் விவாகரத்து செய்துவிட்டீர்களா?… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மகாலக்ஷ்மி….!!!!

சீரியல் நடிகை மகாலக்ஷ்மி மற்றும் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்துக்கு பின் பல சர்ச்சைகள் வந்தாலும், அவை அனைத்தையும் அவர்கள் எதிர்கொண்டனர். திருமணத்துக்கு பின் இருவருமே தங்களுடைய சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவர்.

அண்மையில் மகாலக்ஷ்மி-ரவீந்தர் இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர் என அதிர்ச்சி தகவல் ஒன்று பரவி வந்தது. இந்நிலையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மகாலக்ஷ்மி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது, தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவுசெய்து, நாங்கள் இருவரும் என்றென்றும் கணவன் மனைவி தான் என விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.