
பெங்களூருவில் ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் உள்ளது. இங்கு சாப்ட்வேர் இன்ஜினியராக 24 வயது இளம் பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த இளம் பெண் கடந்த 6 வருடங்களாக தன்னுடைய தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வந்த நிலையில் ஓய்வு நேரத்தில் தன்னுடைய மாமா வீட்டிற்கு சென்று நேரத்தை செலவிடுவார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி இந்த இளம் பெண் ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு வயது திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றி அவர் தீக்குளித்த நிலையில் ஹோட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார்.
தன் மகளின் உடலை பார்த்து தாய் கதறி அழுத நிலையில் அந்த இளம் பெண்ணின் நண்பர் ஒருவர் அவரிடம் சென்றார். அதாவது அந்த இளம் பெண்ணின் மாமா பிரவீன் என்பவர் பென்டிரைவ் மற்றும் செல்போனில் அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்களையும் வைத்துக்கொண்டு தொடர்ந்து மிரட்டியதாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தன்னிடம் கூறியதாக கூறினார். ஆனால் நான் அவரிடம் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் பெற்றோரிடம் இது பற்றி கூறுங்கள் என்று கூறிய போதிலும் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார் என்று நண்பர் கூற அதைக் கேட்டு பதறிப் போன தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரவீன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் நிர்வாண புகைப்படங்களை செல்போனில் ரகசியமாக பதிவு செய்துள்ளார். பின்னர் தன்னுடன் உடலுறவு வைக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் அந்த இளம் பெண் அவருடன் பழகியவதை நிறுத்திவிட்டு வேறொரு வாலிபருடன் பழகியுள்ளார். இது பிரவீனுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் நிர்வாண போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். சம்பவ நாளில் பிரவீன் ஒரு ஹோட்டலுக்கு வருமாறு இளம்பெண்ணை அழைக்கவே அந்த பெண்ணும் அங்கு சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் செல்போன் மற்றும் பென்டிரைவ் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பிரவினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைகின்றனர்.