நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 15 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 16வது தவணை பணம் பிப்ரவரி 28ஆம் தேதி நாளை வழங்கப்படுகிறது. இ – கேஒய்சி முடிக்காதவர்களுக்கு இந்த முறை பணம் கிடைக்காது எனவும் அரசியல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.