இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக நேற்றுடன் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்ட கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வலியுறுத்தி X தளத்தில் இன்று காலை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் instagram பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, காலை உணவுக்கு ஏற்ற அர்த்தமுள்ள வரிகள் என்று கவிதை ஒன்றை கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

அதில், காலை பசியாறுகையில் கனைகுரல் பள்ளி ஒன்று கட்டியம் கூற கேட்டேன் செக்கச் சிவந்த கிழக்கு வெளுக்க தெற்கும் வடக்கும் அகக்கண் திறக்கும் தேடிவரும் நாளை நமதே என்று பதிவிட்டுள்ளார்.