நடிகர் மன்சூர் அலிகான் உடல்நல குறைவால் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் அவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.