2025 ஆம் வருடத்திற்கான முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஒற்றையர்கள் பிரிவில் இன்று கால் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஜோகோவிச் மற்றும் அல்காரஸ் மோதினர். மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த ஆட்டத்தில் 3 – 1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

இது குறித்து அவர் பேசுகையில் “அல்காரஸ் இளம் வயதிலேயே நம்பர் 1 வீரராக விளங்குகிறார். அவர் என்னை விட நீண்ட காலம் இந்த விளையாட்டில் நீடித்திருப்பார். இது கால் இறுதி போட்டி அல்ல இறுதிப் போட்டியாக இருந்திருக்க வேண்டும். இந்த ஆடுகளத்தில் மட்டுமல்லாது எந்த ஆடுகளத்திலும் நான் விளையாடிய மிகச்சிறந்த போட்டி என்றால் அது இதுவாகத்தான் இருக்கும்” எனக் கூறியுள்ளார்