நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்றைய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சுக்கு‌ மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், அல்வா கொடுப்பது என்பது பிரதமருக்கு கைவந்த கலை. முந்தைய தேர்தல் வாக்குறுதியில்  வருடம் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, விவசாய வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம்.

ஒவ்வொருவர் அக்கவுண்டிலும் 15 லட்சம் போடுவோம், நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும், விலைவாசி உயராது, பெண்களைப் பாதுகாப்போம் என எதையுமே நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளார்.