நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக கிசான் கிரெடிட் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கிரெடிட் கார்டு மூலமாக பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதன் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு குறைந்த வட்டி மட்டுமல்லாமல் வட்டி மானியமும் அரசிடமிருந்து வழங்கப்படுகிறது.

இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பிஎம் கிசான் தகவல் தளத்தை பயன்படுத்திக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இனி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எளிதில் பணத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு கிசான் கிரெடிட் கார்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.