உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சகரான்பூர் பகுதியில் சௌரவ் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகைக்கடை உரிமையாளர். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் சவுரவ் மற்றும் அவருடைய மனைவி கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் எங்களுக்கு கடன் சுமை அதிகமாக இருக்கிறது. எங்களால் அதை அடைக்க முடியவில்லை. நாங்கள் பிரச்சனை சரியாகும் என்று நம்பினோம். ஆனால் அது நடக்கவில்லை.
இதனால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம். நாங்கள் சாவதற்கு முன்பாக செல்பி எடுத்து whatsapp ஸ்டேட்டஸில் வைப்போம். எங்களுடைய இரு குழந்தைகளையும் பாட்டி பார்த்துக் கொள்வார்கள் என்று இருக்கிறது. மேலும் அவர்கள் தற்கொலை செய்வதற்கான தேதியையும் whatsapp ஸ்டேட்டஸில் வைத்த நிலையில் கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் சவுரவ் உடல் கரை ஒதுங்கிய நிலையில் அவருடைய மனைவி உடல் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.