தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றிக்கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிருக்கிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து மட்டும் தான் அரசியல் செய்வதாகவும் ஒர்க் ப்ரம் ஹோம் என்றும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பரந்தூர் சென்று தன்னுடைய முதல் அரசியல் களப்பயணத்தை தொடங்கினார். அடுத்ததாக விஜய் வேங்கை வயல் செல்ல திட்டமிட்டுள்ளார். நடிகர் விஜயின் அரசியல் பயணம் திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருப்பார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் விஜய் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது தேர்தலில் நின்னு ஜெயிச்ச பிறகு தான் அனைவரும் சர்கார் அமைப்பார்கள். ஆனால் தற்போது நாம் சர்க்கார் அமைத்துவிட்டு தான் தேர்தலில் நிற்கப் போகிறோம் என்று கூற அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டனர். அடுத்த நொடியே இது படத்திற்காக. படம் பிடித்திருந்தால் அனைவரும் படத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று விஜய் நகைச்சுவையாக கூறிவிட்டார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Opxbobby Opxbobby (@keshavedits8)