தமிழகத்தில் கடந்த வருடம் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் இன்று ஊக்கத்தொகை வழங்க உள்ளார். சென்னையில் இதற்கான அரங்கம் பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மட்டும் சுமார் 1500 பேர் பங்கேற்க உள்ளனர். காலை 9 மணிக்கு விழா தொடங்குகின்றது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 7.45 மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு விருந்தளிக்கிறார் நடிகர் விஜய்.