தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கூடங்கள் தொடங்கப்பட்டு விட்டதால் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கைக்காக சாதி சான்றிதழ் கேட்கப்படும். எனவே சமீப காலமாக சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த பகுதியில் தற்போது தென்காசி மாவட்டம் சிவகிரி சேர்ந்த மாணவி ஒருவர் கடையநல்லூர் கோட்டாட்சியரிடம் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பம் பதிவு செய்துள்ளார்.

ஆனால் உரிய நேரத்தை தாண்டியும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து பதில் வராத காரணத்தால் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்து விசாரித்த நீதிபதிகள் சாதி சான்றிதழ் கோரும் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் முறையான ஆவணங்கள் இல்லை என்றால் நிராகரித்த அதிகாரிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.