தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து தன் திறமையால் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த டான் மற்றும் டாக்டர் போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அதிதி சங்கர் ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படத்தில் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில் பரத் சங்கர் இசை அமைக்கிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று என்பதால் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.