பிரபல தெலுங்கு நடிகையான அனுசுயா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் ராம் சரண், சமந்தாவுடன் ரங்கஸ்தலம் உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். அனுசுயா தன் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்து அவரோடு சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதனை பார்த்த ஒருவர், அப்படியெல்லாம் இல்லை அவரிடம் நிறைய பணம் உள்ளது என்ற பதிவை பகிர்ந்தார். இதனால் அனுசுயாவுக்கு கோபம் வந்தது. இதையடுத்து அவதூறுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அனுசுயா “அது என்னடா தம்பி அப்படி கூறிவிட்டாய். அவரிடம் எவ்வளவு உள்ளது?, என்னிடம் பணமில்லையா? கன்னத்தில் போட்டுக்கொள். இல்லையென்றால் செருப்பால் உன் கன்னத்தில் அடிப்பேன்” என்று கூறியுள்ளார்.