சென்ற ஒரு மாதமாக ரசிகர்கள் பரவலாக பேசப்பட்ட விஷயங்கங்களில் ஒன்று பொங்கல் வின்னர் விஜய்யின் வாரிசு படமா (அ) துணிவு படமா என்பதுதான். இந்த 2 படங்களில் எந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்தது..?,எந்த படம் எந்தெந்த இடங்களில் சரிவை சந்தித்தது என்பது பற்றிய பல தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் இந்த 2 திரைப்படங்களும் எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது, அதில் இருந்து எவ்வளவு ஷேர் கிடைத்திருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வாரிசு படம் ரூபாய்.140 கோடிக்கும் மேல் விற்கப்பட்டு ரூபாய்.147 கோடிக்கும் மேல் ஷேர் கிடைத்துள்ளது. அதேபோல் துணிவு படம் ரூபாய்.85 கோடிக்கும் மேல் விற்கப்பட்டு ரூ.108 கோடிக்கும் மேல் ஷேர் கிடைத்துள்ளது.