பாலிவுட் காதல் ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் தங்களது திருமணத்தை ராஜஸ்தானில் நடத்த முடிவு செய்துள்ளனர். கியாரா அத்வானி தோனி படத்தில் நடித்து பிரபலமானவர். இவர்களின் திருமணம் பிப்ரவரி 6ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பேலஸ் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. திருமண சடங்குகள் பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்கிடையில் காதலர்களாக துபாயில் புத்தாண்டை கொண்டாட அவர்கள் இருவரும் திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் மும்பை விமான நிலையத்திலிருந்து புத்தாண்டை கொண்டாட புறப்பட்டு செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.