2023 திரைப்பட திருவிழாவாக அமையவுள்ளது.

விஜய் : வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். இதன் பின் அட்லீ இயக்கித்தில் நடிக்க இருக்கின்றார் விஜய்.

அஜித் : வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது.

ரஜினி : தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த படமும் இந்த வருடம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் மற்றொரு திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார். அந்த திரைப்படத்தை லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அல்லது தேசிங்கு பெரியசாமி இருவரில் ஒருவர் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் : தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த படத்தை தொடர்ந்து கமல் மகேஷ் நாராயணன் திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இதன் பின் பா.ரஞ்சித் திரைப்படத்திலும் மணிரத்தினம் திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார்.

விக்ரம்: விக்ரம் தற்போது பா.ரஞ்சித்துடன் இணைந்து தங்கலான் திரைப்படத்தில் பணியாற்றி இருக்கின்றார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

சூர்யா : நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படமும் இதன் பின் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்கின்றார்.

தனுஷ்: நடிகர்  தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும் சிம்பு நடிப்பில் 10 தல திரைப்படமும் இந்த வருடம் வெளியாக உள்ளது. இத்திரைப்படங்கள் மறக்க முடியாத திரைப்படங்களாக இருக்கும் என பட குழு தெரிவிக்கின்றார்கள்.

சிவகார்த்திகேயன் : நடிகை சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலும் இந்த வருடத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய திரைப்படங்களும் வெளியாக உள்ளது. மொத்தத்தில் ரசிகர்களுக்கு இந்த வருடம் திரைப்பட திருவிழாவாக அமையும் குறிப்பிடத்தக்கது.