தனக்கு வந்த லெட்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தர்ஷா குப்தா தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் தர்ஷா குப்தா. இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் தர்ஷா, தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்த நிலையில் அண்மையில் தர்ஷா குப்தா அளித்த பேட்டியில் லவ் ப்ரொபோஸ்சல்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்துள்ளதாவது, பள்ளி-கல்லூரி படிக்கும் காலங்களில் தனக்கு யாரும் ப்ரொபோஸ் செய்ததில்லை எனவும் தான் நடிக்க வந்த பிறகு தான் அதிக ப்ரொபோஸ்சல்கள் வர ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக ஒரு நபர் ரத்தத்தில் கடிதம் எழுதி ப்ரொபோசல் லெட்டர் அனுப்பி இருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்து இருக்கின்றார்.