மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் மக்கள் சொந்த ஊருக்கு படை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது சென்னையிலிருந்து நெல்லைக்கு 2500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரையும், கோவை, மதுரைக்கு 2000 ரூபாய் வரையும், திருச்சிக்கு 1500 முதல் 2000 ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.