தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக மே 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பாடத்திற்கும் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். முதலாம் ஆண்டு மதிப்பெண் சான்றுகளுக்கு 100 ரூபாய், இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழுக்கு நூறு ரூபாய், பதிவு மற்றும் சேவை கட்டணம் 15 ரூபாய், ஆன்லைன் பதிவு கட்டணம் 70 ரூபாய் செலுத்த வேண்டும். அது மட்டும் அல்லாமல் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் மே 15 முதல் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதி கட்டணமாக கூடுதலாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.