தொடக்கக்கல்வி பட்டய பயிற்சியில் சேர விருப்பமா…? ஜூன்-5 முதல் விண்ணப்பிக்கலாம்….. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து வகையான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக்கல்வி பட்டய பயிற்சியில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் ஜூன் ஐந்தாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகையான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2023-24 கல்வியாண்டுக்கானஇரண்டு வருட தொடக்க கல்வி பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

எனவே சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஜூன் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply