துருக்கி சிரியாவில் கடந்த 6-ம் தேதி மற்றும் 7-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்பிறகு நிலநடுக்கத்தினால் தற்போது வரை 8,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கிய சிறுமி தன்னுடைய தம்பியின் உயிரை காப்பாற்றுவதற்காக தன்னுடைய கைகளை தம்பியின் தலையில் வைத்துக் கொண்டு பேசும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரின் கண்களிலும் கண்ணீர் வடிய வைத்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு 17 மணி நேரம் கழித்து சிறுமி மற்றும் அவருடைய தம்பி காப்பாற்றப்பட்ட நிலையில் அந்த சிறுமி தன்னுடைய தம்பியின் உயிரை 17 மணி நேரம் போராடிக் காப்பாற்றியுள்ளார். அதன் பிறகு தன்னை காப்பாற்ற வந்தவர்களிடம் சிறுமி எங்களை காப்பாற்றுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்கிறேன். நான் உங்கள் அடிமையாக இருப்பேன் என்று கூறுகிறார். மேலும் நெஞ்சை உலுக்கும் சிறுமியின் வார்த்தைகள் அடங்கிய இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.