துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

ஹெச் வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் ஜன-11ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது.

அதேபோல வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலரும் முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படமும் வரும் ஜன-11 தேதி ரிலீஸ் ஆகின்றது. அஜித்-விஜய் இருவரின் திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதன்படி நள்ளிரவு 1 மணிக்கு ‘துணிவு’ படத்தையும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படத்தையும் தமிழகம் முழுவதும் இருக்கும் தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில் துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. அதாவது இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பெரும் பொருட் செலவில் தயாரான 2 படங்களையும் சட்டவிரோதமாக வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம்  வாரிசு படத்தை வெளியிட 4,548 இணையதளங்கள், துணிவு படத்தை வெளியிட 2754 இணையதளங்களுக்கு தடை விதித்துள்ளது.