ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திட்டமிட்டு “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றம் செய்து “தமிழகம்” என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

அது மட்டுமல்லாமல் ஆளுநர் இல்லத்தில் நடைபெற உள்ள பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்த ஆளுநர் தமிழக அரசின் சின்னத்தையும் தவிர்த்து உள்ளார். இது குறித்து தனது twitter பக்கத்தில் சு.வெங்கடேசன் எம்பி சுட்டிக்காட்டி உள்ளார். அதனைப் போலவே தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோஷப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.