தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக இருந்தவர் எம்ஜிஆர். ஒரு நடிகராக இருந்து  அதன் பின் தமிழ்நாட்டின் முதல்வரான எம்ஜிஆர் முதலில் திமுக கட்சியில் பணியாற்றினார். ஆனால் அதன் பிறகு திமுகவில் கலைஞருடன் ஏற்பட்ட  மனஸ்தாபத்தின் காரணமாக எம்ஜிஆர் அதிமுக கட்சியை உருவாக்கி தமிழ்நாட்டின் முதல்வர் பதவியில் அமர்ந்தார். இப்படி பல்வேறு திறமைகள் படைத்த எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த பிறந்தநாள் விழாவை அதிமுக கட்சியினர் மிகச் சிறப்பாக கொண்டாடிய நிலையில், எம்ஜிஆர் சமாதியில் 106 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி எடப்பாடி அமர்க்களம் படுத்தினார். இதேபோன்று ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் தற்போது பலரது கவனத்தையும் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் எம்ஜிஆர் கைகளால் கமல்ஹாசன் விருது வாங்குவது போன்று இருக்கிறது. அதோடு துணிவு அரசியல் செய்த எம்ஜிஆரின் அரசியல் வாரிசே நம்மவர் கமல்ஹாசன் தான் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த போஸ்டர் தற்போது தமிழக அரசியலில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.