தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி விமானத்தின் எமர்ஜென்சி கதவை போட்டோஷாப் கட்சியின் மாநில தலைவரும் தேசிய தலைவரும் இணைந்து திறந்து விளையாடினர் என்று ட்வீட் பதிவு போட்டிருந்தார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அண்ணாமலை மற்றும் பாஜக தேசிய இளைஞர் அணி தலைவரும் கர்நாடக எம்பியுமான தேஜஸ்வி சூர்யாவும் இணைந்து விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள DGCA உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் இரண்டு ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடியது பற்றி டிசம்பர் 29 அன்று நான் கேள்வி எழுப்பியிருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்று என்று உருட்டிய பொய்யர் சுதந்திர காட்சியை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரிதான் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யாவைதான் குறிப்பிட்ட இந்த ட்விட்டர் பதிவை போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.