தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வருகிற 6-ம் தேதி சென்னையில் நடைபெறும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் நிலையில் எல்லோருக்கும் ஆன தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தை அவர் வெளியிட அதனை ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கர் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த விழாவில் முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் அதன் பிறகு கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்தார். அதாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்த விஜய் திமுகவை கடுமையாக விளாசி  வரும் நிலையில் ஏற்கனவே அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி வரும் நிலையில் விழாவில் விஜயுடன் ஒன்றாக கலந்து கொண்டால் தேவையில்லாத வியூங்களுக்கு வழி வகுக்கக்கூடும் என்பதால் விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவை புறக்கணித்தது ஏன் என்று வன்னியரசு விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது, திருமாவளவன் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என்று கூறவில்லை. சமரச பாயாசம் செய்கிறவர் உடன் மேடையை பகிர்ந்து கொள்ள முடியாது என்ற ஒரே ஒரு காரணத்தினால் மட்டும்தான் அவர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை. நூல் வெளியீட்டு விழா நடத்துபவர்கள் கூட திருமாவளவன் வேண்டாம் பாயாசம் கிண்டுகிறவர்கள் தான் வேண்டுமென்று போய்விட்டார்கள். தேவையில்லாமல் நூல் வெளியீட்டு விழாவை திருமாவளவன் புறக்கணித்து விட்டார் என்ற பொய் பிரச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது. யாரும் திருமாவளவனை பின் நின்று வழி நடத்தவில்லை. திமுக கொடுத்த அழுத்தத்தால் தான் திருமாவளவன் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் திருமாவளவனை  இழுத்த இழுப்புக்கெல்லாம் கொண்டு செல்ல சில தரகர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று கூறினார்